ஜெர்மனி பெண் யாழில் கைது! - Yarl Thinakkural

ஜெர்மனி பெண் யாழில் கைது!

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் நின்ற ஜெர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை காலை குறித்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளது. கொழும்பில் இருந்து ரயில் வந்த குறித்த பெண்ணில் சந்தேகம் கொண்ட இராணுவத்தினர் அவரை சோதணை செய்துள்ளனர்.

இதன் போது அவரின் உடமையில் இருந்து இலத்திரணியல் பொருட்கள் மீட்கப்பட்டனர். இதனையடுத்து அவரை கைது செய்த இராணுவத்தினர் அவரை விசாரணைகளுக்காக யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Previous Post Next Post