கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி! - Yarl Thinakkural

கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி!

உயிர்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற
தீவிரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கான ஆத்மா சாந்தி பிரார்த்தனை யாழ்மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாடு அரசகரும் மொழிகள் சமூகமேம்பாடு இந்து சமய அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நாடாளாவிய ரீதியில் இப் பிரார்த்தனை அனுஷ்டிக்கப்படுகிறது.

இதற்கமைய கொல்லப்பட்ட இலங்கை மற்றும் வெளிநாட்டு மக்களின் ஆத்மா சாந்தி பிராத்தனையாழ் மாவட்ட செயலகத்திலும் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அரச அதிபர்என்.வேதநாயகன்தலைமையில் நடைபெற்றஇப் பிராத்தனை நிகழ்வில்அஞ்சலி உரையை அரசஅதிபர் ஆற்றியிருந்தார். ஆத்மா சாந்திபிரார்த்தனையை மத தலைவர்களும் மேற்கொண்டிருந்தனர்.

அத்தோடு தீபங்கள் ஏற்றி அஞ்சலியுடன் செலுத்தப்பட்டது. நிகழ்வில் அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பலரும்கலந்து கொண்டிருந்தனர்.
Previous Post Next Post