பல்கலையில் புலிகளின் ஆவணங்கள் மீட்பு! இரு மாணவர்கள் கைது- - Yarl Thinakkural

பல்கலையில் புலிகளின் ஆவணங்கள் மீட்பு! இரு மாணவர்கள் கைது-

யாழ்.பல்கலைக்களகத்திற்குள் இன்று நடத்தப்பட்டுவரும் தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர்களில் உருவப்படங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒண்றிய தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர்களின் விடுதி என்பவற்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இரணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் போது பல்கலைக்கழக கலைப்பீடத்திற்குள் நடத்தப்பட்ட தேடுதலின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் மாவீரர்களின் புகைப்படங்கள், பதாகைககள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாதாகைகள் மற்றும் புகைப்படங்கள் கலைப்பீடத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் தொகுதியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளன.

இதனால் இது தொடர்பில் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் விசாரணைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைகக்ப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post