-முக்கிய பாலங்கள் மீது தாக்குதல்! புதிய வீயூகம் அமைக்கும் தீவிரவாதிகள்- - Yarl Thinakkural

-முக்கிய பாலங்கள் மீது தாக்குதல்! புதிய வீயூகம் அமைக்கும் தீவிரவாதிகள்-

நாட்டின் முக்கிய நகரங்களில் ஜ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாதிகள் தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பிலுள்ள பாலங்களை தகர்க்க ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளர் என்று தகவல் வெளியாகியுள்ளது..

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பாலங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் தொடர்ச்சியாக மேலும் பல தாக்குதல்கள் திட்டமிப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கொழும்பு நகரத்துக்கு அருகிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post