பொலிஸ் நிலையத்திற்குள் சொகுசாக வழ்ந்த தாவுத் உணவக உரிமையாளர்! -வெளியானது புகைப்படம்- - Yarl Thinakkural

பொலிஸ் நிலையத்திற்குள் சொகுசாக வழ்ந்த தாவுத் உணவக உரிமையாளர்! -வெளியானது புகைப்படம்-

கைது செய்யப்பட்ட தாவூத் உணவக உரிமையாளர் கனகராஜன்குளப் பொலிஸ் நிலையத்தில் சகல சொகுசு வசதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

குறித்த சந்தேக நபர் ஒரு சிறைக்கைதி போல் இல்லாமல் காவலிலுள்ளவருக்கு தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன சிறைக்கூடத்தில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு கனகராஜன்குளம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொறுப்பதிகாரியின் அனுமதியின்றி இப்பொருட்கள் எவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்விடயத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்த பொலிஸ் அதிகாரிக்கு  எதிராக கடுமையான நடவடிக்கை பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Previous Post Next Post