பாதுகாப்பு ஆலோசகராக பொன்சேகா! - Yarl Thinakkural

பாதுகாப்பு ஆலோசகராக பொன்சேகா!

சரத் பொன்சேகாவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்க மறுப்பு தெரிவத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிப்பதற்கு இணங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து இஸ்லாமிய தீவிரவாதத்தை அடக்குவதற்கு, சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உயர்மட்டத் தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தனர்.

ஆனால் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க முடியாது என்று, ஜனாதிபதி அடியோடு நிராகரித்துள்ளார்.

எஎனினும், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக அவரை நியமிக்கத் தயார் என்றும், தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்துக்கும் அவரை அனுமதிக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post