வற்றாப்பளைக்கு குண்டுடன் சென்றவர்கள் கைது! - Yarl Thinakkural

வற்றாப்பளைக்கு குண்டுடன் சென்றவர்கள் கைது!

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம் திருவிழாவிற்குச் சென்றவர்கள் குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்,வடமராட்சியில் இருந்து குறித்த ஆலயத்திற்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே பளைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல்த் திருவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் எனபது தொடர்பில் பொலிஸாருக்கும் வானில் பயணித்தோருக்குமிடையே  வாய்த் தற்கம் ஏறபட்டுள்ளதாகவும்,

இதன்பின்னர் பொலிஸார் குறித்த வானில் குண்டை வைத்து விட்டு வானில் வந்தவர்கள்
குண்டு வைத்திருந்ததாக சோடிக்கப்பட்ட பொய்யர்களுக்கும் குற்றச் சாட்டின்  கீழ்  குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் பொலிஸார் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

திட்டமிட்ட வகையில் பொலிஸார் குண்டை நாமே வைத்துவிட்டு தமது உறவுகளை கைது செய்திருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுள்ளனர்

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக  பொலிஸாருனால் கைது செய்யப்பட்டவர்களது வீடுகள் வல்வெட்டித்துறையில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post