கொக்குவிலில் திடீர் சுற்றிவளைப்பு! -படையினர் களத்தில்- - Yarl Thinakkural

கொக்குவிலில் திடீர் சுற்றிவளைப்பு! -படையினர் களத்தில்-

யாழ்ப்பாணம் கொக்குவில் - தலையாழி பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இராணுவம், கடற்படை, விசேட அதிரடிப் படை மற்றும் பொலிஸார் இணைந்தே இந்த திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டை விட்டு வீதியில் வரவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வீடு வீடாக நுழைந்து வீட்டில் இருப்பவர்கள் தொடர்பில் பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சோதனைக்குட்படுத்தபட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்து நாடு முழுவதும் முப்படைகளுளம் களம் இறக்கப்பட்டு பாதுகாப்ப நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட நிலையில் யாழ்.

மாவட்டத்தில் தொடர்ச்சியான சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.


Previous Post Next Post