முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! -காய்ந்த இரத்தத்தை ஈரமாக்கிய கண்ணீர் துளிகள்- - Yarl Thinakkural

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! -காய்ந்த இரத்தத்தை ஈரமாக்கிய கண்ணீர் துளிகள்-

தமிழின அழிப்பு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வோடு அனுஸ்ரிக்கப்பட்டது.

இன்று காலை 10.30 மணிக்கு  நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. முதலில் உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

10.32 மணிக்கு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் தாயை பறிகொடுத்த சிறுமி பிரதான சுடரினை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்த சுடர்கள் ஒவ்வொன்றின் முன் நின்றவர்கள் தாம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட உறவுகளை நினைந்து சுடர்களை ஏற்றி அஞ்சலித்தனர்.

உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும்,  கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது ஆற்ற முடியாத் துயரை வெளிப்படுத்தினர்.
Previous Post Next Post