குண்டுதாரிக்காக பிரார்த்தனை! -மெளலவி உட்பட ஐவர் கைது- - Yarl Thinakkural

குண்டுதாரிக்காக பிரார்த்தனை! -மெளலவி உட்பட ஐவர் கைது-

ஈஸ்டர் தினத்தில் சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் மெளலவி உட்பட 5 பேர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.


இன்று செவ்வாய் கிழமை மாலை கொள்ளுபிட்டியில் உள்ள மொஹம்மட் இப்ராஹீம் அன்ஷாப் அஹமட்டின் மனைவின் வீட்டில் வைத்து இவர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த மெளலவி ஒருவரும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த மேலும் நால்வருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து முச்சக்கர வண்டியொன்றையும்  வீட்டில் இருந்து ட்ரோனர் கமரா ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post