சாவகச்சேரி குப்பை மேட்டில் தீ!!! - Yarl Thinakkural

சாவகச்சேரி குப்பை மேட்டில் தீ!!!

சாவகச்சேரி – தளங்களப்பு வீதிக்கருகில் அமைந்துள்ள குப்பை மேட்டில் பாரிய தீ பரவியுள்ளது.

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட கழிவுகள் கொட்டப்படும் இடத்திலேயே இந்தத் தீ பரவியுள்ளது.

இந்தத் தீ நேற்றிரவு 11 மணியவில் ஏற்பட்டிருக்குக் கூடும் என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Previous Post Next Post