ஜமாத் அமைப்பின் ஆயுதப் பிரிவு பொறுப்பாளரை தேடி வலைவீச்சு! - Yarl Thinakkural

ஜமாத் அமைப்பின் ஆயுதப் பிரிவு பொறுப்பாளரை தேடி வலைவீச்சு!

நாட்டில் நடாத்தப்பட்ட தொடர் குண்டுத் தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை ஒருவரை கைது செய்வதற்கான இரகசிய விசாரணைகளை சி.ஜ.டி ஆரம்பித்துள்ளது.

தேநிய தௌஹித் ஜமா அத் என்னும் அமைப்பின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த மில்ஹான் என்பவரையே தேட சி.ஜ.டி வலை விரித்துள்ளது.

குறித்த நபர்  தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு  உம்ராவுக்காக சென்றுள்ளதாக சி.ஐ.டி.க்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

அவர் மீள இலங்கைக்கு திரும்பவில்லை எனவும் அவரது பயணப் பொதி மட்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டன. அதன்படி மில்ஹானைக் கைது செய்ய சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அவர் போராட்ட காலத்தில் காத்தான்குடியில் இயங்கியதாக நம்பப்படும் துணை  ஆயுதப் படைகளில் இருந்தவர் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  வவுணதீவுவில் பொலிஸார் கொலை செய்யப்பட்ட தாக்குதல் சமபவத்தை அவரே  நெறிப்படுத்தியுள்ளதாகவும்  தகவ்ல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
Previous Post Next Post