துப்பாக்கியுடன் ஒருவர் கைது! - Yarl Thinakkural

துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் உடவலவ தேசிய பூங்கா பிரதேசத்தில்; மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் வேட்டையில் ஈடுபட முயன்றுள்ள போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக உடவல வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Previous Post Next Post