யாழ் பலாலி வீதியில் விபத்து! -பெண் சாவு- - Yarl Thinakkural

யாழ் பலாலி வீதியில் விபத்து! -பெண் சாவு-

யாழ்.பலாலி வீதியில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வேன் ரக வாகனம் ஒன்றும், துவிச்சக்கரவண்டியொன்றும் மோதி நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்துச் சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த 49 வயதான அதே பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.

துவிசக்கரவண்டியை செலுத்தியவர் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

Previous Post Next Post