வவுனதீவு சூட்டுச் சம்பவத்தில் கைதான முன்னாள் போராளிக்கு விடுதலை! - Yarl Thinakkural

வவுனதீவு சூட்டுச் சம்பவத்தில் கைதான முன்னாள் போராளிக்கு விடுதலை!

மட்டக்களப்பு – வவுணதீவில் நடத்தப்பட்ட இரு பொலிஸார் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான அஜந்தன் என்னும் முன்னாள் போராளியை விடுவிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

இத்தகவலை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில், பொலிசாரை கொலை செய்தது தேசிய தௌஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இவ்விடயத்தில் அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மாஅதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக அமைச்சர் மனோ கணேசனிடம், ஜனாதிபதி வாக்குறுதி உறுதியளித்துள்ளதாக மனோககேணசன்  தனது முகப் புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அஜந்தனின் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கு அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகம் அறிவித்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post