600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்! - Yarl Thinakkural

600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்!

நாட்டில் நடைபெற்ற தீவிரவாத தற்கொலை தாக்குதலின் எதிரொலியாக 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அவர்களுள் 200 இஸ்லாமிய மத போதர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வீசா அனுமதி நிறைவந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களுள் பெரும்பான்மையானவர்கள், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post