-அசாதாரண சூழல்- மீண்டும் 5900 இராணுவம் சேவைக்கு! - Yarl Thinakkural

-அசாதாரண சூழல்- மீண்டும் 5900 இராணுவம் சேவைக்கு!

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலப்பகுதியில் இதுவரை 5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த 22ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , குறித்த காலப்பகுதியில் மீண்டும் சேவைக்கு சமூகமளிக்கும் இராணுவ வீரர்களுக்கு சட்டரீதியாக பதவி விலகல் கடிதத்தை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவ ஊடக பேச்சார் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்திருந்தார்.

அறிவிக்காமல் சேவையில் இருந்து சென்ற சிலரே இவ்வாறு மீண்டும் சேவைக்குத் திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

6 மாதக்காலத்திற்கும் குறைந்த காலம் சேவைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் தற்போதைய நிலையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post