விமான விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் சாவு! - Yarl Thinakkural

விமான விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் சாவு!

ரஸ்யா - மொஸ்கோவில் இடம்பெற்ற விமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக சாவடைந்தனர்.

மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து மேர்மான்ஸ்க் நோக்கி பயணித்த எரோபுளொட் ஜேட் (Aeroflot Flight) விமான சேவைக்கு சொந்தமான SU 1492 விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் உடனடியாக திரும்ப தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய வேளை திடீரென புகை மூட்டத்துடன் தீ வேகமாக பரவியுள்ளது.

இதையடுத்து அவசரமாக விமான ஓடுதளத்தில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியினூடான பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

எனினும் குறித்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 78 பேர் பயணம் செய்த நிலையில் அவர்களில் 41 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் தீ விபத்திலிருந்து தப்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post