சுரங்க அறையில் பதுங்கிய 3 பேர் கைது! - Yarl Thinakkural

சுரங்க அறையில் பதுங்கிய 3 பேர் கைது!

வீட்டிற்கு அடியிலிருந்த சுரங்க அறையிலிருந்து நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட மூன்று சந்தேகநபர்களை வெலிமடைப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிமடைப் பகுதியின் போகாகும்பரை என்ற இடத்தில் முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமான வீட்டின் அடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்க அறையில் பதுங்கியிருந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டடுள்ளனர்.

போகாகும்பரை  மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே, குறிப்பிட்ட வீடு இன்று சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வீட்டின்  படுக்கையறையின் வீட்டின் தரையில் சுரங்க அறையொன்று அமைக்கப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

 பொலிசாஸாரும், இராணுவத்தினரும் இச் சுரங்க அறையைக் கண்டுபிடித்து, அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

இந்நிலையில் அங்கு பதுங்கியிருந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இம் மூவரும், பொலிஸாராலும், இராணுவத்தினராலும் தேடப்பட்டு வந்தவர்களென்று ஆரம்பகட்ட  விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸாரும், இராணுவத்தினராலும் கைதுசெய்யப்பட்ட மூவர் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 குறிப்பிட்ட சுரங்க அறையிலோ, வீட்டிற்குள்ளோ எவ்வித பயங்கரவாதப் பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லையென பொலிஸாரும், இராணுவத்தினரும் தெரிவித்தனர்.
Previous Post Next Post