பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து கார்! -ஒருவர் சாவு; 2 பேர் படு காயம்- - Yarl Thinakkural

பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து கார்! -ஒருவர் சாவு; 2 பேர் படு காயம்-

யாழ் தீவகம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை 5 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையாக இடம்பெற்றது.

மூவரும் காரில் மண்கும்பான் சாட்டிக் கடற்கரைக்குச் சென்று திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றது.

வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார், வீதியோரம் உள்ள கட்டைகளுடன் மோதுண்டு கடலுக்குள் பாய்ந்தது என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். சாரதி உள்பட இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவா் கொக்குவில் பகுதியைச் சோ்ந்த முருகையா முகுந்தராஜா (வயது-34) என்பவர் என பொலிஸாா் தெரிவித்தனர்.

அத்துடன், விடுப்பில் வீடு திரும்பிய கடற்படைச் சிப்பாய்கள் இருவர் படுகாயமடைந்தனர். முதுசங்க வயது(38), எஸ்.டபள்யூ.கே. சம்பத் வயது(28) ஆகிய இரு கடற்படை சிப்பாய்கள் விடுமுறையில் செல்வதற்கு குறித்த காாில் ஏறி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வரும் போது அவா்கள் இருவா் படுகாயமடைந்தனர்.

சாரதியின் மதுபோதையில் இருந்தார் என பொலிஸாா் தொிவித்தனா்.


Previous Post Next Post