14 பள்ளிவாசல்கள் யாழில் முற்றுகை! - Yarl Thinakkural

14 பள்ளிவாசல்கள் யாழில் முற்றுகை!

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய ஜவுகீத் தமா அத் அமைப்பினரின் பள்ளிவாசல் உட்பட 14 பள்ளிவாசல்கள் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் அதிரடியாக முற்றுகையிட்டு சோதணைக்கு உட்படுத்தப்பட்டது.

பெருமளவான இராணுவம், அதிரடிப்படைய மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு இவ்வதிரடி அதிரடி முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் யாழில் நேற்று பரபரப்பான சூழல் நிலவியது.

உயிர்த்த ஞர்யிறு தினத்தன்று நாட்டில் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி யாழ்.மாவட்டத்திலும் குண்டுத்தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுண்டுக்குளி மகளில் கல்லூரியிலும் குண்டுத்தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தீவிர தேடுதல் நடவடிக்கைகளை அடுத்த வெடி பொருட்கள் மற்றும் மர்மான பொருட்கள் பலவும் படைத்தரப்பினர்களால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று யாழ் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் ஒரே நேரத்தில் சோதனையிடப்பட்ட்து. எனினும் அங்கிருந்து எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை. மேலும் சந்தேக நபர்களும் எவரும் கைது செய்யப்படவில்லை.

இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியயோர் நேற்று புதன்கிழமை காலை 10 மணியில் இருந்து ஒரு மணி வரை பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இந்த தேடுதல் வேடடையில் தேசிய ஜவுகீத் தமா அத் அமைப்பினரின் பள்ளிவாசல் 14  பள்ளி வாசல்கள் பாதுகாப்பு தரப்பினரால் சோதனையிடப்பட்ட்து.


Previous Post Next Post