நெல்லியடி விடுதியில் வெடிகுண்டா? -சுற்றிவளைப்பு தேடுதல் ஆரம்பம்- - Yarl Thinakkural

நெல்லியடி விடுதியில் வெடிகுண்டா? -சுற்றிவளைப்பு தேடுதல் ஆரம்பம்-

யாழ்ப்பானம் - நெல்லியடி பகுதியில் குண்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விடுதி ஒன்று தற்போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்தே இச் சுற்றிவளைப்பை செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றிருக்கின்றது.

தற்போது பொதுமக்கள் அந்த பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதியில் வெடி பொருள் உள்ளதாக கூறியிருக்கும் பொலிஸாா், சம்பவ இடத்திற்குள் இராணுவம் நுழையவுள்ளதாகவும், கூறியுள்ளதுடன் சம்பவம் தொடா்பில் மேலதிக தகவலை வெளியட மறுத்துள்ளனா்.
Previous Post Next Post