ரயில் சேவை இரண்டு நாள் முடங்கும்! - Yarl Thinakkural

ரயில் சேவை இரண்டு நாள் முடங்கும்!

தொடருந்து தொழிற்சங்கத்தினர் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமது வேதன பிரச்சினையை முன்வைத்து எதிர்வரும் 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் தொடர்பான அறிவிப்னை தொடருந்து இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்தக தொடங்கொட வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரை தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் தொடருந்து நிலைய அதிபர்கள், சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொடருந்து கண்காணிப்பு முகாமையாளர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post