பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான 850ஆண்டு பழமையான நோட்ரே-டாம் தேவாலயத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, நீண்ட போராட்டத்துக்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்தால் ஏறக்குறைய 850ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளன.
ஆனால் இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டு கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கிய பகுதி தீ விபத்தில் இருந்து தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவாலயத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் சில சீரமைப்பு பணிகளின் காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.