ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது! -பொலிஸ் பேச்சாகளர் அறிவிப்பு- - Yarl Thinakkural

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது! -பொலிஸ் பேச்சாகளர் அறிவிப்பு-

நாடு முழுவதிலும் கடந்த 12 மணித்தியாலங்களாக நடமுறையில் இருந்த பொலிஸ் ஊடரங்குச் சட்டம் இன்று திங்கட்கிழமை காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரை பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டமே இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் 218 பேர் உயிரிழந்துள்ளதுடன் 452 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post