மின்சார துண்டிப்பு! -காரணம் இதுவே- - Yarl Thinakkural

மின்சார துண்டிப்பு! -காரணம் இதுவே-

நாட்டில் தற்போது மின்சார தட்டுப்பாட்டிற்கு காரணம் , 2020 ஆம் ஆண்டு வரை தாம் சமர்பித்த மின்னாலை திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தாமல் விட்டமையே காரணம் என்று மின்சார பொறியியலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் தலைவர் குமாரவடு கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் , மின்சார தட்டுப்பாட்டிற்கு மின்சார சபையின் பொறியியலாளர்களுக்கும் மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கும் இடையில் நிலவும் முரண்பாடு காரணமில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை , மின்சார துண்டிப்பிற்கான காரணம் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றாமையே என மின்சார பொது ஊழியர் சங்கம் சங்கம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post