அதிகாலையில் கோர விபத்து! -பிறந்த நாளில் இளைஞர் சாவு- - Yarl Thinakkural

அதிகாலையில் கோர விபத்து! -பிறந்த நாளில் இளைஞர் சாவு-

யாழ் அரியாலை கொழும்புத்துறைப் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாகப் உயிரிழந்தார். 

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

தனது மூத்த சகோதரன் புதிதாக வாங்கிக் கொடுத்த மோட்டார் சைக்கிளில், வீட்டிலிருந்து அதிகாலை வேளையில் புறப்பட்ட 22 வயது இளைஞன் கொழும்புத் துறை ரயில்வே கடவைக்கு அருகில் உள்ள மதிலுடன் மோதுண்டு, படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

சம்பவத்தையடுத்து விரைந்த அயலவர்கள், வேகமாக அவரை வைத்தியசாலையில் சேர்த்த போதிலும், சிகிச்சை பலனளிக்காமல் குறித்த இளைஞன் 

இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பலியான இளைஞனுக்கு இன்று பிறந்த தினம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 
Previous Post Next Post