திருணம பேச்சூடாக பண மோசடி! -மணப்பெண் வேடமிட்டு மடக்கிய பொலிஸ்- - Yarl Thinakkural

திருணம பேச்சூடாக பண மோசடி! -மணப்பெண் வேடமிட்டு மடக்கிய பொலிஸ்-

யாழில் உள்ள பெண்களிடம் திருமணப் பேச்சு என்ற சதி வலையில் வீழ்த்தி பெரும் தொகையான பணமோசடி செய்தவரை அவர் விரித்த வலையில் வைத்தே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைப் பகுதியில் நடைபெற்ற இச் சம்பவம் தொடரபில் மேலும் தெரியவருவது-

பத்திரிகையில் மணப் பெண் தேவை என்று குறித்த நபர் விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்­ப­ரத்தை பார்த்த பெண் வீட்­டார் அதில் போடப்­பட்ட தொலைபேசி இலங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஜாதக பொருத்தம் எல்லாம் சரியாக உள்ளது திருமணத்திற்கு நாள் குறிக்குமாறு கூறிய குறித்த நபர் கூறியுள்ளார். இருப்பினும் தனக்கு வழங்க வேண்டிய நீதனத்தை உடன் தருமாறும் குறித்த நபர் அறிவுறுத்தியுள்ளார்

அவரை நம்பிய பெண் வீட்டார் 9 இலட்சம் ரூபாவினை அவருடைய வங்கி இலக்கத்திற்கு வைப்பிலிட்டுவிட்டு, திருமணத்திற்கு நாள் குறித்துள்ளனர்.

திருமணத்திற்கு நாள் குறித்த செய்தியை மாப்பிள்ளையான குறித்த நபருக்கு அறிவிப்பதற்கு தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்த முற்பட்ட பெண் வீட்டாருக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

அதாவது மாப்பிள்ளையான அந்த நபருடைய தொலைபேசி இயங்கவில்லை. வீடு தேடி சென்ற போதும் அந்த நபர் அங்கு இல்லை.

இதன் பின்னர் சுதாகரித்துக் கொண்ட பெண் வீட்டார் குறித்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

புதுவிதமான மோசடிக் காரன் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொண்ட பொலிஸார் அவரை கையும் மெய்யுமாக பிடிப்பதற்று திட்டம் வகுத்திருந்தனர்.

குறிப்பாக அவர் விரித்த சதி வலையில் வைத்தே அவரை கைது செய்த முடிவு செய்துள்ளனர்.

இதன்படி பத்திரிகை விளம்பரத்தில் உள்ள தொலை பேசி இலக்கத்துடன் பெண் பொலிஸ் ஒருவர் தொடர்பினை ஏற்படுத்தி ஆசைவார்த்தைகளை பேசியுள்ளார்.

தொடர்பு கொண்டது பெண் பொலிஸார் என்பாதை அறிந்து கொள்ளாத அந்த நபர் அவரிடமும் பண மோசடி செய்வதற்கு திட்டம் வகுத்துள்ளார்.

இந்நிலையில் ஆலயம் ஒன்றிற்கு வருமாறு அழைத்த போது குறித்த நபர் அங்கு வந்துள்ளார். அங்கு வந்த அவரை மணமகள் போன்று பாசாங்கு செய்த பெண்  பொலிஸ் உத்தியோகஸ்தர் அங்கு மறைந்திருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடைய உதவியுடன் கையும் மெய்யுமாக கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் விவா­க­ரத்­துப் பெற்­ற­வர் என்­பது தெரி­ய­வந்­தி­ருக்­கின்­றது. அவர் அரா­லிப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் என்­றும் பொலி­ஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Previous Post Next Post