யாழ்ப்பாணம் பள்ளிவாசலில் சிக்கிய பொருட்கள் - Yarl Thinakkural

யாழ்ப்பாணம் பள்ளிவாசலில் சிக்கிய பொருட்கள்

யாழ். மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மாஹதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் இருந்து பாவனைக்குதவாத பெருந்தொகையான தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர்களில் பொதிகள் மற்றும் பணம் என்பன விசேட அதிரப்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து பல பாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்.நாவாந்துறை மற்றும் ஐந்து சந்திப் பகுதியில் பெருமளவிலான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரப்படையினர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே மேற்படி பள்ளிவாசலில் பாவனைக்குதவாத தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர் பொறிக்கப்பட்ட பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post