வடமராட்சி விபத்தில் இளைஞர் சாவு!  - Yarl Thinakkural

வடமராட்சி விபத்தில் இளைஞர் சாவு! 

யாழ்ப்பாணம் வடமராட்சி, துன்னாலையில் இன்று இரவு  இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ்விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

நெல்லியடி கொடிகாமம் வீதியில் துன்னாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து  முச்சக்கர வண்டியில் மோதுண்டு புரண்ட மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.  

விபத்தில் 18 வயதான கா.கஜீபன் என்ற இளைஞனே பலியாகியுள்ளார், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 21 வயதான இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post