வடக்கிற்கு அதிக வெப்பம்! - Yarl Thinakkural

வடக்கிற்கு அதிக வெப்பம்!

நாட்டில் சில பிரதேசங்களில் இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரைக்கும் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் அநுராதபுரம், மொனராகலை மற்றும் கம்பஹா முதலான மாவட்டங்களில் வடமேல் மாகாணத்திலும் இவ்வாறு அதிக வெப்பமான வானிலை நிலவக் கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் 33 செல்சியஸ் அளவில் அதிக வெப்பநிலை பதிவாகியிருந்தது.
Previous Post Next Post