யாழ்.சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி! - Yarl Thinakkural

யாழ்.சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி!

யாழ்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய யாழ் போதானா வைத்தியசலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக்கடிதம் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது. இவர் சிரேஸ்ட வைத்திய நிர்வாக சேவை வைத்தி உத்தியோகத்தர் ஆவார்.

கடந்த வருடம் யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் நந்தகுமரன் வவுனியா வைத்தியசாலைக்கு பணிப்பாளராக சென்ற பின் யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.

பதில் பணிப்பாளராக கனிஸ்ட வைத்திய நிர்வாக சேவை வைத்திய உத்தியோகத்தர் ஒருவர்  கடமையாற்றி வந்ததது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post