வருடப்பிறப்பில் விபத்து! -பருத்தித்துறை குடும்பஸ்தர் பலி- - Yarl Thinakkural

வருடப்பிறப்பில் விபத்து! -பருத்தித்துறை குடும்பஸ்தர் பலி-

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சாவடைந்துள்ளார்.

பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த ம.புவிகரன் (வயது38) என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே சாவடைந்தவர் ஆவர்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த அவர் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்கு உள்ளான குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post