அலரி மாளிகைக்குள் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு! - Yarl Thinakkural

அலரி மாளிகைக்குள் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு!

கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு பணியாற்றிய விசேட அதிரடிப் படையைச் சேர்ந்தவர் ஒருவர் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விசேட அதிரடிப் படையைச் சேர்ந்தனர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

31 வயதுடையவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post