-குண்டுவெடிப்பின் எதிரோலி- கட்டுநாயக்காவிற்கு பாதுகாப்பு! - Yarl Thinakkural

-குண்டுவெடிப்பின் எதிரோலி- கட்டுநாயக்காவிற்கு பாதுகாப்பு!

நாட்டின் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, கட்டுநாயக்க, பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் பண்டாரநாயக்க விமான நிலையத்தினுடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைவாக விமான பயணிகள் தவிற ஏனையவர்கள் விமான நிலைய வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டர்கள் எனவும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விமானப் பயணங்களை மேற்கொள்கின்ற பயணிகளை உரிய காலத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறும் விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Previous Post Next Post