மின்னல் தாக்கத்தால் சாவடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம்! - Yarl Thinakkural

மின்னல் தாக்கத்தால் சாவடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம்!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது.

இன்று காலை 6.00 மணிக்கு யாழ்மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் உடுவில் பிரதேச செயலர் ஜெயக்காந், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி முரளிதரன், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அபராசுதன், கிராம சேவகர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் அடங்கிய குழுவினர் மின்னல் அனர்த்தம் நிகழ்ந்த சம்பவ இடத்தினை சென்று பார்வையிட்டதோடு உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கும் சென்றனர். 

இதன்போது சமுர்த்தி பாதுகாப்பு நிதியத்தின் மரணத்திற்கான கொடுப்பனவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கொடுப்பனவு ரூபா ஒரு லட்சத்தில்  உடனடியாக பதினையாயிரம் ரூபாவினை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரச அதிபர் வழங்கினார். மேலும் உயிரிழந்தவர்களில் ஒரிவருக்கான வீட்டுத்திட்டத்தினை முன்னுரிமை அடிப்படையில் வழங்கவுமாறும் அரச அதிபர் பணித்துள்ளார்.
Previous Post Next Post