சூரிய ஒளி தாக்கத்திற்குள்ளாகும் உணவுகளை தவிர்க்க அறிவுறுத்தல்! - Yarl Thinakkural

சூரிய ஒளி தாக்கத்திற்குள்ளாகும் உணவுகளை தவிர்க்க அறிவுறுத்தல்!

தற்போது வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படுவதால் சூரிய ஒளியின் தாக்கத்திற்குள்ளாகும் உணவு பண்டங்களை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூரிய ஒளித்தாக்கத்தை கொண்ட கேக் இனிப்பு பண்டங்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சங்கத்தின் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக தெரிவிக்கையில் சூரிய ஒளியின் தாக்கத்தின் காரணமாக இந்த உணவு பொருட்களில் உள்ள இரசாயனங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

இதனால் இதன் தரத்துக்கும் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக எப்பொழுதும் பாதுகாப்பான முறைக்கு உட்பட்ட வகையில் உணவை மாத்திரம் பயன்படுத்துமாறு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous Post Next Post