முல்லையில் கைதான ஊடகவியலாளருக்கு பிணை! - Yarl Thinakkural

முல்லையில் கைதான ஊடகவியலாளருக்கு பிணை!

முல்லைத்தீவில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு ஊடகவியலாளருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.19 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள் மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.

இதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் இனம் தெரியா நபர் ஒருவர் தனது கைபேசியில்  ஒளிப்படம் எடுத்துள்ளார். 

புகைப்படம் எடுத்தவர் யார் என்று வினாவிய போது அவர் தான் கடற்படை அதிகாரி என்று தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா எனஅடையாளப்படுத்தியபோது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்த போது அவரை குறித்த இடத்தில் வருகைதந்த போலீசாரிடம் ஒப்படைத்து  திரும்பியுள்ளார்.


இன்னிலையினை தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் உண்மைக்க புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்யுதுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 18.04.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின்  ஊடகவியலாளரான ச.தவசீலன் பொலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் இன்று காலை பொலீஸ் நிலையத்துக்கு அழைத்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைதுசெய்துள்ளனர் .

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளரை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்திய போது அவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதவான், அவரை மீண்டும் எதிர்வரும் 30 ஆம் திகதி மன்றில் தோண்றுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

Previous Post Next Post