-தேசிய இளைஞர் விருதுக்காக விண்ணப்பம் கோரல்- - Yarl Thinakkural

-தேசிய இளைஞர் விருதுக்காக விண்ணப்பம் கோரல்-

நாட்டின் தேசிய இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரைக்கும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று இளைஞர் சேவைகள் மன்றம் அறிவித்துள்ளது.

15 வயது தொடக்கம் 29 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இளைஞர் விருதுக்கான போட்டிகள் மாவட்டம், மாகாணம் மற்றும் தேசிய மட்டங்களில் மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளன.

விருதுகள் மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளது. நாடகப் போட்டி மற்றும் இலக்கிய போட்டிகளுக்கு 15 தொடக்கம் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இளைஞர் விருது போட்டியில் வெற்றி பெறும் இளைஞர் யுவதிகள் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள். மாகாண மட்டத்தில் வெற்றிபெறுபவர்கள் தேசிய மட்டத்தில் பங்குபற்ற முடியும்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த விருது தொடர்பான மேலதிக தகவல்களை இளைஞர் சேவைகள் மன்றத்தின்http://www.nysc.lk என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
Previous Post Next Post