‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தில் விஜய் சேதுபதி! - Yarl Thinakkural

‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தில் விஜய் சேதுபதி!

நடிகர் விஜயர் சேதுமபதி ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ என்ற படத்தில் இணைந்திருக்கிறார்.

வருகின்ற ஏப்ரல் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘அவென்ஜர்ஸ்: என்ட் கேம்’ திரைப்படத்தின் ‘மார்வெல் ஆன்தம்’ தமிழில் வெளியிடப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆண்ரியா, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்படத்தில் பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு நடிகை ஆண்ட்ரியா மற்றும் அயன் மேன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி தமிழில் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.

படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்இ இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் அந்தமை உருவாக்கி இருக்கிறார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
Previous Post Next Post