ஊசி மருந்து அதிக விலையில் விற்பனை! -ஊழலா? ஓளடத அதிகார சபைமீது பாயும் ஆணைக்குழு- - Yarl Thinakkural

ஊசி மருந்து அதிக விலையில் விற்பனை! -ஊழலா? ஓளடத அதிகார சபைமீது பாயும் ஆணைக்குழு-

ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர்களை ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த தரத்திலான ஊசி மருந்துகளை மஹரகம அபேக்சா மருத்துவமனைக்கு அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான முறைப்பாடு குறித்த ஆணைக்குழுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒளடதங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவரான நீதியரசர் உபாலி அபேரத்ன விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளின்போது, வேறு ஒளடதங்கள் தொடர்பில் கேள்விக்குட்படுத்துவதானது, இந்த விசாரணைகளை திசைத்திரும்பும் என்றும், எனவே, அவ்வாற செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
Previous Post Next Post