இந்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க சிறிலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான ‘பட்ஜட்’மீது இன்று மாலை பாராளுமன்றத்தில் இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்போது எதிர்த்து வாக்களிக்குமாறு சுதந்திரக்கட்சிக்கு மஹிந்த அணி அறைகூவல் விடுத்துள்ளது.
எனினும், ‘பட்ஜட்’டின் இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதில் பங்கேற்காமல் நடுநிலை வகித்த சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், இறுதி வாக்கெடுப்பிலும் அதே பாணியை கையாளவுள்ளனர்.
எனினும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்த்து வாக்களிக்ககூடும் என அறியமுடிகின்றது.
மஹிந்த அணியும், ஜே.வி.பியும் எதிர்த்து வாக்களிக்கவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு நேசக்கரம் நீட்டவுள்ளது.