கொழும்பு குண்டுவெடிப்பில் இருந்து உயிர் தப்பிய நடிகை ராதிகா! - Yarl Thinakkural

கொழும்பு குண்டுவெடிப்பில் இருந்து உயிர் தப்பிய நடிகை ராதிகா!

கொழும்பில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இருந்து நடிகை ராதிகா சரத்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். 

கொழும்பில் உள்ள சின்னமன் கிராண்ட் ஹோட்டல் ஷங்ரிலா ஹோட்டல்களில் குண்டுவெடித்துள்ளது.

இது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது-

இலங்கையில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது.கடவுள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். 

நான் தற்போது தான் சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து கிளம்பினேன். அங்கும் குண்டு வெடித்துள்ளது.

நம்ப முடியவில்லை இது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் ராதிமா நல்ல வேளை நீங்கள் பிழைத்துக் கொண்டது என்று கூறி நிம்மதி அடைந்துள்ளனர்.
Previous Post Next Post