தாக்குதலுக்காக மறைத்து வைத்திருந்த குண்டு கட்டுநாயக்காவில் மீட்ப்பு! - Yarl Thinakkural

தாக்குதலுக்காக மறைத்து வைத்திருந்த குண்டு கட்டுநாயக்காவில் மீட்ப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தாக்குதல் நடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த குண்டு மீட்கப்பட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

விமாந நிலையத்திற்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு  விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை விமான நிலையத்துக்கு  காணப்பட்ட அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு அதன் பாதுகாப்பு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந் நிலையிலேயே விமானப்படையின் நடமாடும் சோதனைப் பிரிவு நேற்று இரவு 10.15 அளவில்  சோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த ஒருங்கிணைக்கப்பட்ட பி.வீ.சி. குழாய்க் குண்டு மீட்கப்பட்டதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் கிஹான் செனவிரதன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
Previous Post Next Post