யாழில் தீவிர சோதணை நடவடிக்கை! -விசேட அதிரடிப்படை களத்தில்- - Yarl Thinakkural

யாழில் தீவிர சோதணை நடவடிக்கை! -விசேட அதிரடிப்படை களத்தில்-

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை அடுத்து யாழ்ப்பாணத்தில் தீவிர சோதணை நடவடிக்கையில் விசேட அதிரடிப் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். 

பொலிஸ் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் இன்று திங்கட்கிழமை காலை முதல் யாழ்.நகரப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

குறிப்பாக யாழ்.பிரதான பஸ் நிலையத்தில் தற்போது தீவிர சோரதனையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்களை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதோடு, அவர்களின் உடமைகளையும் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். 
Previous Post Next Post