முல்லையில் மாபெரும் போராட்டம்! -காணாமலாக்கப்பட்டோரின் அழைப்பு- - Yarl Thinakkural

முல்லையில் மாபெரும் போராட்டம்! -காணாமலாக்கப்பட்டோரின் அழைப்பு-

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் நாளை ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நாளை 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

இப் போராட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

மாவட்ட செயலகத்திற்கு முன்னால் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி வட்டுவால் பாலத்தில் முடிவடையவுள்ள இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி, இலங்கையுடன் சேர்ந்து சர்வதேசமும் தம்மை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பினரை நம்பியே தாம் வாக்களித்ததாகவும் அவர்கள் அரசுக்கு விலைபோயுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எது எவ்வாறாயினும் தாம் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post