மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய இரு குடும்பங்களில் இழப்பு! - Yarl Thinakkural

மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய இரு குடும்பங்களில் இழப்பு!

மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜுட் ஹென்றிக் (48வயது), அவரது மனைவி கிறஸ்ன்டா ஹென்றி (42வயது), அவர்களது மகன் ஜு.ஹெய்ட் (19வயது), மகள் செரேபி (10வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கருவப்பங்கேணி முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த லிஸ்டர் (34வயது), அவரது மனைவி நிசாலி (27வயது), அவர்களது இரட்டைக்குழந்தைகளான மூன்று வயதுடைய பைஹா, ஹனாலி ஆகியோரும் நிசாலியின் தாய் தந்தையரான ரெலிங்டன் ஸொப்ஸ் (56வயது), செல்பியா (53வயது) ஆகியோரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் நிசாலியின் குடும்பத்தினைச் சேர்ந்த அனைவரும் உயிரிழந்துள்ள நிலையில் ஜுட் ஹென்றிகின் ஒரு மகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்று, அம்பாறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது 12பேர் பயணித்ததாகவும் அவர்களில் 10பேர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post