இலங்கை வருகிறது சித்திரவதைகள் தடுப்பு ஐ.நா குழு! - Yarl Thinakkural

இலங்கை வருகிறது சித்திரவதைகள் தடுப்பு ஐ.நா குழு!

ஜக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள்  தடுப்புத் தொடர்பான ஒழு இன்று செவ்வாக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளது.

நாட்டில் எந்த அளவு சித்திரவதைகளினால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதைக் கண்டறியும் நோக்கிலேயே இவர்களின் விஜயம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இங்கு வரும் குறித்த குழுவினர் எதிர்வரும் 12ம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருந்து, அரசாங்க அதிகாரிகள், சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்புகளை சந்தித்து கலந்துரையாடல் நடத்தவுள்ளனர்.

இந்த சந்திப்புகளின் பின்னர், இலங்கை அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் சித்திரவதைகள் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உபகுழு, ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் நான்கு உயர்மட்ட அதிகாரிகள் அடங்குகின்றனர்.


மொல்டோவைச் சேர்ந்த விக்டர் சஹாரியா (Victor Zaharia) தலைமையிலான இந்தக் குழுவில் மொறிஸியஸின் சட்யாபோசுன் குப்ட் டோமாஹா(Satyabhooshun Gupt Domah), சைபிரஸைச் சேர்ந்த பீட்டர்ஸ் மிசேலிட்ஸ் (Petros Michaelides) மற்றும் ப்லிப்பைன்ஸ்ஸை சேர்ந்த ஜுன் லோப்ஸ் (June Lopez) ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழுவில் தலைவரான விக்டர் சஹாரியா கருத்து தெரிவிக்கையில், சித்திரவதை தடுப்பு குறித்து தீர்க்கமான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளுக்கு பணிப்புரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post