தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இன்று நள்ளிரவு முதல் அவசர காலச் சட்டம் நடமுறைப்படுத்த தேசிய பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது.
இத்தீர்மானம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பிய ஜனாதிபதி நண்கல் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தை கூட்டியிருந்தார்.
இக் கூட்டத்தில் ஏடுக்கப்பட்ட முடிவின்படி தொடர்ந்து 30 நாட்களுக்கு அவசர கால சட்டத்தை நடமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.