இந்திய பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக இடம்பெறவுள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ஆம் திகதி 91தொகுதிகளுக்கு நடந்து முடிந்தன. இரண்டாம் கட்டமாக 12மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
ஆனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். எதிர்வரும் மே 23ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.